வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள்

கல்லூரி வளாகம் முழுவதும் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குகள் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் வருகிற 22ந்தேதி எண்ணப்படுகிறது. 60 வார்டுகளை கொண்ட மாநகராட்சியில் முதலாவது மண்டலத்துக்கு 14 இருக்கைகளும் 2 வது மண்டலத்துக்கு 14 இருக்கைகளும் மூன்றாவது மண்டலத்துக்கு 16 இருக்கைகளும் 4 வது மண்டலத்தில் 16 இருக்கைகளும், வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இன்று மாலை முதல் வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும்.

இதற்காக கல்லூரி வளாகம் முழுவதும் மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளன.  இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன,  முழுவதுமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது போல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாக்குகள் வைக்கப்பட்டு இருக்கும் மையத்தில் 24 மணி நேரமும் தூப்பாக்கி  எந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுபோன்று தாராபுரம் நகராட்சிக்கு பொன்னு மேல்நிலை பள்ளியிலும், காங்கேயம் நகராட்சிக்கு கார்மல் மேல்நிலை பள்ளியிலும், பல்லடம் நகராட்சிக்கு அரசு கலைக் கல்லூரியிலும் உடுமலை நகராட்சிக்கு நகராட்சி திருமண மண்டபத்திலும, வெள்ளக்கோவில் நகராட்சிக்கு வெள்ளக்கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியிலும், திருமுருகன்பூண்டிக்கு நகராட்சிக்கு அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

அவிநாசி பேரூராட்சிக்கு அவிநாசி பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், சின்னக்காம்பாளையம், மூலனூர், ருத்ராவதி, பேரூராட்சிகளுக்கு தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், கணியூர், குமாரமங்கலம், மடத்துக்குளம், சங்கராமநல்லூர், தளி பேரூராட்சிகளுக்கு மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னத்தூர், ஊத்துக்குளி, பேரூராட்சிகளுக்கு ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முத்தூர் பேரூராட்சிக்கு வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சாமளாபுரம் பேரூராட்சிக்கு சாமளாபுரம் ஏ.வி.ஈடி மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com