காலமுறை ஊதியம் - அங்கன்வாடி பணியாளர்கள் வலியுறுத்தல்

பணிக்கொடை ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு ஒன்றிய தலைவர் வனிதாமணி தலைமையில் திருப்பூர் கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமேகலை வரவேற்றார். சி.ஐ.டி.யு., திருப்பூர் மாவட்ட செயலாளர் ரங்கராஜ் மாநாட்டை துவக்கி வைத்தார். 

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில்அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டும்.

பணிக்கொடை ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com