மதுபான பாரில் பணம் வாங்கும் கட்சிக்காரர்கள் - சமூகவலைதளங்களில் தி.மு.க. நிர்வாகி வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு

கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர்பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

பல்லடத்தில் சமூக வலைதளங்களில் தி.மு.க. நிர்வாகி ஒருவர் மதுபான பாரில் கூடுதலாக விலை அதிகம் வைத்து விற்பனை செய்வது குறித்து பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் பல்லடம் மதுபான பாரில் பீர் குடிக்க சென்றேன். அதற்கு 300 ரூபாய் என்றனர். கோவையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் கூட பல வகையான தின்பண்டங்கள் கொடுத்து ரூ.250க்கு தான் பில் போடுகின்றனர். பல்லடத்தில் இவ்வளவு அதிகமாக பில் போடுகிறீர்களே என்று கேட்டபோது, அந்த பார் உரிமையாளர், கட்சிக்கார ர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்.அதற்கெல்லாம் யாரிடம் வாங்குவது என கூறினார். எந்தக் கட்சிக்கா ரர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்று நான் கேட்டபோது எல்லா கட்சிக்கும் தான் என்றனர்.

எதற்காக கட்சிக்காரர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இது கட்சி தலைமை வரை இது தெரியட்டும் என்றுதான் இந்த பதிவை போடுகிறேன். இவ்வாறு அவர் பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com