ஓவியர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

பெங்களூருவில் அகில இந்திய அளவில் நடக்கும் ஓவியக்கண்காட்சிக்கு பங்கேற்பதுடன், அனைவரும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தமிழ்நாடு ஓவியர்கள் சங்கம் செயற்குழு கூட்டம், திருப்பூரில் நடந்து. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். ரவிச்சந்திரன், சாதிக் பாஷா, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செந்தமிழ் ராஜா, நாகராஜ் வரவேற்றனர். தர்மராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கூட்டத்தில் மார்ச் இறுதிக்குள் அனைத்து ஓவியர்களும், நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். திருப்பூரில் ஓவியக் கண்காட்சி நடத்துதல், மாத சந்தா தொகை குறைத்தல், பெங்களூருவில் அகில இந்திய அளவில் நடக்கும் ஓவியக் கண்காட்சிக்கு பங்கேற்பதுடன், அனைவரும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் பொருளாளர் ராமசுந்தர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com