பல்லடம் நகராட்சியில் சொத்து வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த உத்தரவு

வரிகளை செலுத்தாத பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல்லடம் நகராட்சி.
பல்லடம் நகராட்சி.
Published on

பல்லடம்:

பல்லடம் நகராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்ட, வரிகளை மார்ச் 31&ந்தேதிக்குள் செலுத்தி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு  மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு ஆணையாளர் விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

 பல்லடம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி,தொழில் வரி,காலியிட வரி,குத்தகை இனம், குடிநீர் கட்டணம்,மற்றும் நகராட்சி வணிக வளாக கடைகளில் வாடகைக்கு உள்ளவர்கள், தங்களது வரிகளை மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.

வரிகளை செலுத்தாத பட்சத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தவிர்க்க உடனடியாக வரிகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com