தேசிய இளைஞர் தினத்தையொட்டி இணையவழி வினாடி - வினா போட்டி

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை 1984 அன்று இந்திய அரசு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பாக தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையவழி வினாடி வினா நிகழ்வும், இணையவழி கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12-ந் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொணடாடப்பட்டு வருகிறது. 100 இளைஞர்களை தாருங்கள். புதியதொரு இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன் என்று கூறினார் . 

அந்த அளவுக்கு அவர் இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்திருந்தார். இன்றைய இளைஞர்களிடையே பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்த்து எதிர்கால இந்தியாவை வளர்ந்த இந்தியாவாக மாற்றுகின்ற சக்தியாக அவர்களை மாற்ற வேண்டும். 

ஆகவே சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளன்று அவரின் வழிகாட்டுதல்கள், தன்னம்பிக்கை கருத்துக்கள் ஆகியவற்றை இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். 

ஆகவே சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை 1984 அன்று இந்திய அரசு தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது. அன்று முதல் அவரது பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் விவேகானந்தரை பற்றிய இணைய வழி வினாடி வினா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 12-ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை இணைய வழியில் நடைபெறும். இந்த இணைய வழி வினாடி வினாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் இணைப்பின் மூலமாக பதிவு செய்ய வேண்டும் 

அல்லது galilioscienceclub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். வினாடி வினாவில் பங்கேற்கும் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இணைய வழி சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து எதிர்கால இந்தியாவை கட்டமைக்கும் இளைஞர்கள் என்ற தலைப்பில், கோவை என்.என்.எம்.வி., கல்லூரி பேராசிரியர் லெனின் பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் இளைஞர்களுக்கான வழிகாட்டுதல்கள் என்ற தலைப்பில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மற்றும் எழுத்தாளர் சபரீஷ் பள்ளி கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாட உள்ளனர். 

பதிவு செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்பதற்கான இணைப்பு அனுப்பப்படும். கருத்தரங்கில் சிறப்பாக பங்கேற்று கருத்தரங்கில் கேட்கும் வினாக்களுக்கு பதிலளிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும். 

பெயர்களை பதிவு செய்ய கடைசி தேதி 12-ந்தேதி மதியம் 2 மணி வரை. மேலும் தகவல்களுக்கு  கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com