இ.எஸ்.ஐ. சார்பில் காவலாளியின் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை

கருணாகரனின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க இ.எஸ்.ஐ., கோவை மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் கருணாகரன்(வயது 60) என்பவர் காவலாளியாக பணிபுரிந்தார். கொரோனா காரணமாக பலியானார். இதையடுத்து கருணாகரனின் குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க இ.எஸ்.ஐ., கோவை மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டார். 

திருப்பூர் இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கிளை மேலாளர் திலீப், நிவாரண உதவித்தொகைக்கான ஆணை, சான்றோர் அடையாள அட்டை ஆகியவற்றை கருணாகரனின் குடும்பத்தினரிடம் வழங்கினார். 

இறுதிச் சடங்கிற்கான தொகை ரூ.15 ஆயிரம், நிலுவைத்தொகை ரூ.44,793 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. நாளொன்றுக்கு ரூ.189 வீதம் மாதம் ரூ.5,670 கருணாகரனின் குடும்பத்தினர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com