அரளி விதையை தின்று முதியவர் தற்கொலை

கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை அடுத்த புக்குளம் கிருஷ்ணசாமி தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 56) .கடந்த 15 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வேதனையில் இருந்துள்ளார். சம்பவத்தன்று காலை 11 மணிக்கு அரளி விதையை அரைத்து குடித்துள்ளார்.

பின்பு உறவினர்கள் இவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com