

அவினாசி:
அவினாசி ஒன்றியத்தில்பணிபுரியும் சத்துணவு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை புதுப்பிக்கும் பொருட்டு கடந்த ஜனவரி மாதம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது குடும்ப உறுப்பினர் அடங்கிய புகைப்படம் ஒட்டிய படிவம் ஆணையாளரிடம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 21. 1. 2022 அன்றுஅமைப்பாளர் ஜோதி தனது கணவர்,மகள் ஆகியோர் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளார்.
அவரது படிவத்தில் அலுவலகம் முத்திரையும் ஆணையாளரின் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. படிவம் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் 2 பெண் சத்துணவு அமைப்பாளர்கள், அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜோதியின் படிவத்தை புகைப்படத்துடன் அலுவலக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
இதுபற்றி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.