நோட்டா வாக்களிக்கும் வசதி - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதி இருந்தது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள 18 வார்டுகளுக்கு 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 40 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், வாக்காளர்கள் 'நோட்டா' வுக்கு வாக்களிக்கலாம். 

இந்த நடைமுறை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் பின்பற்றப்பட்டது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்ததலில் 'நோட்டா' பயன்படுத்தவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

இதுகுறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில், போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லை என்றால், நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதி இருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நோட்டா வுக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்படவில்லை. இதனால் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 

இதனால் வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை செய்யாமல் தவிர்த்து விடும் நிலை உள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல்களிலும் நோட்டா நடைமுறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com