கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர். 
கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபர். 
Published on

அவினாசி:

அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் அவினாசியை அடுத்து தேவம்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் (வயது 28) என்பதும் அவர் தற்போது பச்சாம்பாளையத்தில் தங்கி தேவம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 380 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com