வெள்ளகோவிலில் புதிய வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

விரைவில் நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இவர்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க திட்டமிட்டுள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் ஞாயிறுதோறும் நடைபெற்று வந்த வாரச்சந்தை வளாகத்தில் தினசரி அங்காடி கடைகள் கட்டப்படுகின்றன. வாரச் சந்தைக்கான மாற்று இடம் நகராட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாரச் சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் வாரச் சந்தை வியாபாரிகள் 400க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கொடிகாத்த குமரன் வாரச் சந்தை வியாபாரிகள் நல சங்கத்தை துவக்கியுள்ளனர். விரைவில் நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இவர்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com