சாமளாபுரத்தில் புதிய பத்திர பதிவு அலுவலகம்- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் பகுதி, பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்துடன் இணைக்க அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விசைத்தறி, சைசிங், நூல் மில்கள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன.

இப்பகுதி கோவை மாவட்டம், சூலூர் பத்திர அலுவலகத்தின் கீழ் உள்ளது. பொதுமக்கள் சார்பில் திருஞானசம்பந்தம் என்பவர் அனுப்பிய மனுவில், சூலூர் சட்டசபை தொகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி, திருப்பூர் வருவாய் மாவட்டத்தின் கீழ் உள்ளது. தொகுதி சூலூராக இருப்பதால், நிர்வாகத் திட்டங்கள், ஒதுக்கீடு என அரசியல் ரீதியாக சாமளாபுரம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

புதிய பத்திரப்பதிவு அலுவலகம் ஆட்சி மறுவரையறை செய்யப்பட்டு கோவை மாவட்டத்தில் உள்ள சாமளாபுரம் பகுதி, பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்துடன் இணைக்க அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்துடன் இணைப்பதை வரவேற்கிறோம். ஆனால், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம் 20 கி.மீ., துாரத்தில் உள்ளதால்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

எனவே சாமளாபுரத்தை மையமாக கொண்டு, சாமளாபுரம், இச்சிப்பட்டி, பருவாய் பகுதிகளை இணைத்து புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com