பல்லடம் அருகே ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டபணிகள் அமைக்க பூமி பூஜை - செல்வராஜ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.52லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் அமைக்க பூமிபூஜை நடைபெற்ற காட்சி. 
ரூ.52லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் அமைக்க பூமிபூஜை நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி பகுதியில் ரூ. 52 லட்சம் மதிப்பிலான கான்கிரீட் ரோடு அமைத்தல், ஆழ்குழாய் கிணறு அமைத்தல், தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நலத்திட்ட பணிகளை திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதில் பல்லடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம், ஒன்றியக்குழு தலைவர்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூர் வக்கீல் குமார், ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், பல்லடம் நகர மன்ற முன்னாள் தலைவர் பி.ஏ. சேகர், நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி. சுப்பிரமணியம், சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணை தலைவர் மருதாச்சலமூர்த்தி, செயலாளர் சுரேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பரமசிவம், துரைமுருகன், அன்பரசன், பூமலூர் தியாகராஜன், அம்மாபாளையம் குமார், ராஜேஸ்வரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com