பல்லடம் அருகே பூட்டிய வீட்டிற்குள் புகுந்து பணம் - வெள்ளி நகை திருட்டு

அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.தனியார் பனியன் கம்பெனி நிர்வாகியாக வேலை பார்த்து வருகிறார்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரவிக்குமார்(40) இவர் தனியார் பனியன் கம்பெனி நிர்வாகியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 ந்தேதி அன்று சொந்த ஊரில் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக வீட்டைபூட்டி விட்டு பவானி அருகே உள்ள குமாரபாளையத்திற்கு சென்று விட்டார். பின்னர் கடந்த 6 ந்தேதி வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பின்பக்க வழியாக வந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த ரூ.5000 பணம், மற்றும் 2 வெள்ளி வளையல்கள், யுபிஎஸ் இன்வெர்ட்டர் கருவி ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் ரவிக்குமார் வீடு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் பெண்களைப் போல் நைட்டி அணிந்த ஒருவர் ரவிக்குமார் வீட்டிற்குள் செல்வது தெரியவந்தது இதைஅடுத்து அந்த மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com