பல்லடம் அருகே ஆழ்குழாய் கிணறு இணைப்பு பணிக்கு பூமி பூஜை

மின் மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் பொருத்தி தண்ணீர் குழாய் இணைப்புகள் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு விரிவாக்க பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
  வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் ஆழ்குழாய் கிணறு விரிவாக்க பணி நடைபெற்ற போது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி சின்ன வடுகபாளையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் வருவதில்லை. இதையடுத்து, கனிமம் மற்றும் சுரங்க நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் மற்றும் உதிரிபாகங்கள் பொருத்தி தண்ணீர் குழாய் இணைப்புகள் விரிவுபடுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் தலைமை தாங்கினார். ஆழ் குழாய் கிணறு இணைப்பு விரிவாக்க பணிகளை பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் மணிமேகலை அன்பரசன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com