என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
- காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
- கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.
பல்லடம்:
திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் ( வயது 70 ). இவர் தனது மனைவியுடன் திருப்பூரிலிருந்து பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துவிட்டு மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென முன்பக்க என்ஜினில் இருந்து புகையுடன் தீப்பிடித்தது. இதனை கண்டு கணவன்-மனைவி இருவரும் அலறி அடித்து காரை விட்டு இறங்கியதால் தீ விபத்தில் இருந்து இருவரும் உயிர் தப்பினர்.இந்த நிலையில் அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்புதுறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன்பகுதி தீயில் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.