முத்தூர் அருகே வேன் மோதி முதியவர் பலி

இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com