பல்லடத்தில் பழுதான போக்குவரத்து சிக்னலால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி சாலை, மங்கலம் சாலை ஆகியவை நால்ரோட்டில் சந்திக்கின்றன.
பழுதான சிக்னல்.
பழுதான சிக்னல்.
Published on

பல்லடம்:

பல்லடம் நால்ரோட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது .கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பொள்ளாச்சி சாலை, மங்கலம் சாலை ஆகியவை நால்ரோட்டில் சந்திக்கின்றன. 

எந்த நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்த நால்ரோட்டில் போக்குவரத்து சிக்னல் பழுதாகி சிவப்பு, பச்சை ஆகிய விளக்குகள் ஒரே நேரத்தில் இயங்கியதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து, தாறுமாறாக வாகனங்களை இயக்கினர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கிருந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்து சிக்னல் விளக்குகளை பராமரித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com