திருப்பூர் மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
காலை உணவு திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து மாணவர்களுடன்  அமர்ந்து சாப்பிட்ட காட்சி. 
காலை உணவு திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட காட்சி. 
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி சின்ன முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் 1081 பள்ளிகளில் 75,482 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.

திருப்பூர் மாநகரில் உள்ள 120 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 26,079 மாணவ மாணவிகளுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தினை திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். 15 வேலம்பாளையம் அரசு பள்ளியில் மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்பராயன் எம்.பி., மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com