அரசு பஸ் மோதி மெக்கானிக் பலி

கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது.கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) . கார் மெக்கானிக் . செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் வசந்தராஜா (37) என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com