தேமல் நோயில் இருந்து வாழை மரத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்- வேளாண் அதிகாரிகள் விளக்கம்

கோவை, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on

உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தென்னை, நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம் பல்வேறு தானியப்பயிர்கள், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்த வரிசையில் ஏழு குளம், அமராவதி மற்றும் ஒரு சில பகுதிகளில், இறவைப்பாசனத்தில்வாழை சாகுபடி செய்யப்படுகிறது.

பல ரக பழங்களுக்கான வாழை சாகுபடி மட்டுமின்றி இலை அறுவடை செய்வதற்கான வாழை ரகமும் அதிகம் காணப்படுகிறது. அவ்வகையில் இப்பகுதிகளில் இருந்து கோவை, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் சில பகுதிகளில், வாழையை தாக்கும் தேமல் நோயினால் வாழை விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

வாழையின் அடிப்பகுதி மற்றும் அதன் மைய நரம்பு இலைகளில் சுழல் வடிவ 'பிங்க்' கலந்த சிவப்பு நிற கோடுகள் காணப்படும்.

மஞ்சரி காம்புகளிலும் கோடுகள் காணப்படும். இந்த வைரஸ் அசுவினி பூச்சி, பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் வாயிலாக பரவுகிறது.களைகளை நீக்கி வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வயலை சுற்றி உள்ள களைகளில் நச்சுயிரிகள் தங்கியிருக்கும். எனவே, எங்கும் களைகள் இருக்கக்கூடாது.

நோய் பாதிக்கப்பட்ட வாழைக்கன்றுகளை கண்டறிந்து அழிக்கவேண்டும். நோய் வருவதற்கு காரணமான அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த 'பாஸ்போமிடான்' ஒரு லிட்டருக்கு ஒரு மில்லி அல்லது மெத்தில் 'டெமட்டான்' இரண்டு மில்லி மருந்துகளை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com