

உடுமலை:
உடுமலை நகரின் மத்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 27-ந் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவிலில் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கியது. அதன்படி நாள்தோறும் கோவிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.