பி.ஏ.பி. வாய்க்காலில் ஆண் பிணம் - போலீசார் விசாரணை

சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள புத்தரச்சல் பி.ஏ.பி பாசன வாய்க்காலில், நேற்று மாலை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, வாய்க்காலில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அருகிலிருந்தவர்களிடம் சிறுவர்கள் கூறினர். 

அவர்கள் வந்து பார்த்த போது வாய்க்கால் மதகு அருகே, அழுகிய நிலையில் உடல் மிதந்த நிலையில் கிடந்தது. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com