இணைப்பு பாட பயிற்சி கட்டகம் தயாரிப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

உடுமலை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 8-ம் வகுப்பிற்கான இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் தயாரித்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

உடுமலையில் 8-ம் வகுப்பு இணைப்பு பாட பயிற்சி கட்டகம் தயாரித்தல் குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

உடுமலை நகராட்சி பார்க் எக்ஸ்டென்ஷன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமிற்கு திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சங்கர் தலைமை வகித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் இணைப்பு பாட பயிற்சி  கட்டகம் தயாரித்தல் பணி ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலை திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 8-ம் வகுப்பிற்கான இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் தயாரித்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

8-ம் வகுப்பில் உள்ள அனைத்து பாடங்களுக்கும் இணைப்பு பாட கற்றல் செயல்களை மீளாய்வு செய்தல், புதிய கருத்துக்களை சேர்த்து வளப்படுத்துதல், முந்தைய வகுப்பு பாடக்கருத்துகளை இணைத்தல், ஆசிரியர் செயல்பாடு, கற்பித்தல் செயல்பாடு, மாணவர் செயல்பாடு, மதிப்பீட்டு செயல்பாடு ஆகியவற்றை எவ்வாறு வடிவமைப்பது என்பது குறித்து முகாமில் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளிக்கப்பட்டது.

பணிமனையின் கருத்தாளர்களாக திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபிஇந்திரா, சுப்பிரமணி, சரவணகுமார் செயல்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com