தபால் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி

தேசிய அளவில் 3 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பள்ளி குழந்தைகளுக்கான சர்வதேச தபால் அமைப்பின் கடிதம் எழுதும் போட்டி தபால்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.

இதன் கீழ் காலநிலை நெருக்கடியில் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக செல்வாக்கு மிக்க ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும். ஆங்கிலம் அல்லது அவரவர் மாநில மொழியில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுத வேண்டும்.

தேசிய அளவில் 3 சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதுதவிர சிறந்த படைப்புகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்படும். 

விரும்புவோர், மேலும் விபரங்களுக்கு ‘www.indiapost.gov.in’ என்ற இணையதளத்தை அல்லது, தபால் நிலையங்களை அணுகலாம். திருப்பூர் அளவில் மார்ச் 4-ந்தேதி இந்த போட்டி நடப்பதாக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com