

திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.இதனால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்ற தாலுகாவுக்கு மாறும் என அறிவிக்கப்பட்டது.
காங்கயம் அரசு மருத்துவமனை அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கயம் பகுதி தி.மு.க.,வினரும், பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
திருப்பூர், திருச்சி, கோவை, பழனி, சேலம், தாராபுரம், ஈரோடு நகரங்களை இணைக்கும் முக்கிய பகுதியாக இருப்பதால் காங்கயத்தில் தலைமை மருத்துவமனை அமைவதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.