பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நீதிபதிகள் ஆய்வு

நிலுவையில் உள்ள பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஒப்பந்ததாரரிடம் நீதிபதிகள் விளக்கி கூறினர்.
ஆய்வில் ஈடுபட்ட நீதிபதிகள்.
ஆய்வில் ஈடுபட்ட நீதிபதிகள்.
Published on

பல்லடம்:

பல்லடம் மங்கலம் ரோட்டில் கடந்த 2020ல் ரூ. 5.50 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், நீதிபதி அறைகள், எழுத்தர் அறை, நூலகம், பதிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இரண்டு அடுக்கு தளங்களுடன் கட்ட பூமி பூஜை போடப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்றது. 

தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே இந்த மாத இறுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திறப்பு விழா செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) நாகராஜன் தலைமையிலான நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நீதிமன்ற கட்டடத்தில் உள்ள அனைத்து அறைகளையும் நீதிபதிகள் பார்வையிட்டனர். 

ஏ.சி., மின் விளக்குகள் பொருத்தாதது,வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நிலுவையில் உள்ள பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஒப்பந்ததாரரிடம் விளக்கி கூறினார்கள். 

இந்த ஆய்வின்போது தலைமை குற்றவியல் நீதிபதி புகழேந்தி மற்றும் பல்லடம் நீதிபதி ஹரிராம், மற்றும் வழக்கறிஞர் சங்க செயலாளர் சக்திவேல், வக்கீல்கள் ஈஸ்வரமூர்த்தி, வெங்கடாசலபதி, மாணிக்கராஜ், கீர்த்திவர்மன், மகேஷ், ராஜேஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com