அறிவியல் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

தேசிய மாநாடு மற்றும் கண்காட்சி மத்திய பிரதேசம் உஜ்ஜையனி விக்ரம் பல்கலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

நாட்டின் 75வது சுதந்திர தின விழா பல்வேறு அரசு துறைகள் வாயிலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய கலாசார அமைச்சகத்தின் வாயிலாக ‘இந்தியாவின் தேசிய நாள்காட்டி’யின் பல்வேறு அறிவியல் சார் கருத்துக்களை முன்னிலைப்படுத்த உள்ளது.

அதற்கான தேசிய மாநாடு மற்றும் கண்காட்சி மத்திய பிரதேசம் உஜ்ஜையனி விக்ரம் பல்கலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ‘விபா’ மற்றும் அறிவியல் சார் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ‘ஆன்லைன்’ வாயிலாகவும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்கேற்போருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். 

எனவே மாநாட்டில் பங்கேற்க http://bharatcalendar.in/ இணையதள முகவரியில், வரும் 12-ந்தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். தகவல் அறிய உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளரை 8778201926 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com