அனுமதியின்றி ஆலமரக்கிளைகள் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினா் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

அவிநாசி:

அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த சிலர் ஆட்களை வைத்து ஆலமரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.

இதுகுறித்து தாசில்தார் மோகனன் கூறியதாவது:- ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி கோரியிருந்தனா். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி பெறாத நிலையில் ஆலமரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com