வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தீவிரம்

அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வாக்குச்சாவடி அமைப்பது குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய வருவாய்த்துறை அலுவலங்களில் வேட்பாளர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளன. இங்குள்ள பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று வாக்குச்சாவடி அமைப்பது குறித்து பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பு வழிகளை பின்பற்றி வாக்கு அளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com