திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் ஆய்வு - பொதுமக்கள் வலியுறுத்தல்

பெரும்பாலும் எப்.சி., சான்றிதழ் பெற்ற பின்பே பள்ளி பஸ் இயக்கத்துக்கு வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, தாராபுரம், உடுமலை ஆகிய 4 ஆர்.டி.ஓ., அலு வலகங்கள் உள்ளது. நர்சரி அண்ட் பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 2,324 பள்ளி வாகனங்கள் இயக்கத் தில் உள்ளது. ஆண்டுக்கு 4 முறை அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

பெரும்பாலும் எப்.சி., சான்றிதழ் பெற்ற பின்பே பள்ளி பஸ் இயக்கத்துக்கு வருகிறது. வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக சிறப்பு தணிக்கை நடத்தினால் மட்டுமே பள்ளி பஸ் முழு நிலவரம் தெரியவரும். திருப்பூரிலோ அல்லது தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் பள்ளி பஸ் விபத் தில் சிக்கினால் அல்லது உயிரிழப்பு ஏற்பட்டால் அடுத்த சில நாட்களுக்கு ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் சுணக்கமாகி விடுகிறது.

கடந்த 2019 டிசம்பர் மாதத்துக்கு பின் ஒன்று முதல் பிளஸ் 2 வரையும், பிரிகேஜி, எல்.கே.ஜி., யு.கே.ஜி., வரை முழு அளவில் நடப்பு கல்வி யாண்டில் (3 மாதமாகத்தான்) பள்ளி செயல்பட துவங்கி யுள்ளது.

கொரோனா காரணமாக இதற்கு முன் பள்ளி செயல்பாடு முழுமையாக இல்லை. பள்ளி பஸ்களில் சொற்ப அளவிலே மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். பெரும்பாலான பள்ளிகளில் பஸ் அல்லது வேன் இருக்கையை கணக்கீட்டு மாணவர்கள் அழைத்து செல்வதால் கூடுதலாக மாணவர்களை அழைத்து செல்வதற்கான வாய்ப்பு கிடையாது. கல்லூரி பஸ்சில் இருக்கை இருந்தாலும் நின்றுகொண்டு பயணி ப்பதை மாணவர்கள் விரும்பு கின்றனர்.

பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோக்களை பொறுத்த வரை 5 முதல் 6 பேருக்கு தான் அனுமதி வழங்கப்படும். ஆனால் 10 பேர் வரை பயணி ப்பது வாடிக்கையாக உள்ளது.

சென்னையில் பள்ளி மாணவர் பள்ளி வளாகத்தில் பஸ் மோதி இறந்தது தொடர்பாக, சென்னை பள்ளிகல்வித்துறை மாவட்ட அளவில், வட்டார போக்குவரத்துதுறை அளவிலும் உத்தரவுகளை வழங்கியுள்ளது.

அனைத்து மாவட்ட ங்களுக்கான விரிவான அறிவிப்புகளை வெளியிட்ட பின் பள்ளி பஸ் சிறப்பு தணிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளி வாகனங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com