திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, உலக சாதனை முயற்சி

திருக்குறள் வடிவில் அமர்ந்து தபால் அட்டையில் திருக்குறள் எழுதி மாணவர்கள் அசத்தினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், திருவள்ளுவர் உலக சாதனை அமைப்பு, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில்  திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி, உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

திருக்குறள் வடிவில் அமர்ந்து தபால் அட்டையில் திருக்குறள் எழுதி மாணவர்கள் அசத்தினர். முதுகலை இயற்பியல் ஆசிரியர் மெய்க்குமார் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் காயத்ரி தலைமை வகித்தார். தீயணைப்பு மற்றும் மீட்புபணி அதிகாரி பாஸ்கரன் முன்னிலை வகித்தார். 

266 மாணவர்கள் ஒரே நேரத்தில் 1,330 தபால் அட்டையில் (4.59 நொடிகளுக்குள்) திருக்குறள் எழுதினர். அதில் 202 மாணவர்கள் 1,330 திருக்குறளை அகர வரிசைப்படி பிரித்து 78 நிமிடங்களில் ஒப்பித்தனர். 266 மாணவர்கள் திருக்குறள் வடிவில் அமர்ந்தது, பார்வையாளர்களை கவர்ந்தது. உயிரியல் ஆசிரியர் ரகுராம், கணிதஆசிரியர் கீதா நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com