வெள்ளகோவிலில் வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் மீது தாக்குதல்

காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள நூல் மில்லில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நிர்மல் தாஸ் (வயது 28), பிரஞ்சநாதன் தாஸ் (26), சூர்யா (24), ரஞ்சன் தாஸ் (25) ஆகியோர் கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஓலப்பாளையம் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் இவர்கள் நான்கு பேரும் வேலை செய்து வந்ததாகவும், அப்போது மில்லின் உரிமையாளர் விஸ்வநாதன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடிக்கடி மில்லில் இருந்து பணம் மற்றும் மின் மோட்டார்கள் காணாமல் போவதாக கூறி, இந்த 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com