உடுமலையில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம்

உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது. 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர்.
பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடந்த காட்சி.
பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம் நடந்த காட்சி.
Published on

உடுமலை:

உடுமலை வட்டம் அந்தியூர் பஞ்சாயத்து சடைய கவுண்டன் புதூரில், உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது. இதில் சடைய கவுண்டன் புதூர் மற்றும் ஜீவா நகரை சார்ந்த 46 ஆண்மற்றும்பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் சக்தி கலைக்குழு பவளக்கொடி கும்மியாட்ட பயிற்சியாளர் மகாலிங்கத்திடம் 15 நாட்கள் பயிற்சி பெற்றனர். 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com