திருப்பூரில் ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் புகுந்த நல்ல பாம்பு- இளைஞர்கள் பிடித்தனர்

மோட்டார் சைக்கிளின உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை நீண்ட நேரமாக போராடி லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து பிடிப்பட்ட நல்ல பாம்பு.
மோட்டார் சைக்கிளில் இருந்து பிடிப்பட்ட நல்ல பாம்பு.
Published on

திருப்பூர்:

திருப்பூர் அடுத்த வஞ்சி பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் துரையரசன். இவர் நேற்று பள்ளி வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

பின்னர் வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளை எடுக்க முயற்சித்தபது மோட்டார்சைக்கிள் முன்புறத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மோட்டார் சைக்கிள் அதே இடத்தில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து அவிநாசியைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர்கள் விஜய் மற்றும் கவுதம் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளின உள்ளே இருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை நீண்ட நேரமாக போராடி லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் இருந்த நல்ல பாம்பால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com