

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 34 லட்சத்து 42 ஆயிரத்து 440 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இவர்களில் 20 லட்சத்து 31 ஆயிரத்து 735 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 14 லட்சத்து 5 ஆயிரத்து 403 பேர் இரண்டாம் தவணையும் செலுத்தியுள்ளனர்.
அதிகபட்சமாக கோவிஷீல்டு தடுப்பூசியை 29 லட்சத்து 79 ஆயிரத்து 375 பேரும்,கோவேக்ஷினை 4.59 லட்சம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 17.87 லட்சம் ஆண்கள், 16.49 லட்சம் பெண்கள் என மொத்தம் 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.