தத்தனூரில் மூலிகை செடிகள் நிறைந்த இடத்தில் ‘சிப்காட்’ அமைக்கக்கூடாது

வக்கனை மரங்கள், ஆய மரம், பனை மரம், வேலா மரம் என, பலவகை மரங்கள் உள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

அவிநாசி சேவூர் அருகேயுள்ள தத்தனூரில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டை அணியாத சாமியப்பன் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சிப்காட் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மானாவாரி பயிர்களான நிலக்கடலை, எள், தட்டைபயறு, கால்நடை தீவனமான சோளம்  போன்றவற்றை பயிரிட்டு எளிமையான வாழ்க்கையை விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த இடத்தில் மின்பாதை, அதை தாங்கியுள்ள டிரான்ஸ்பார்மர்கள் மட்டுமே, செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. மற்றபடி இயற்கையாய் விளைந்துள்ள பல்வேறு மூலிகை தாவர, செடியினங்கள், மரங்கள் நிறைந்துள்ளன.

வக்கனை மரங்கள், ஆய மரம், பனை மரம், வேலா மரம் என, பலவகை மரங்கள் உள்ளன. மானாவாரி நிலமாக இருந்தாலும் இயற்கை சூழ் பகுதியாக உள்ளது. நகர்புறங்களில் கம்பிவேலிகளே அதிகம் தென்படும் நிலையில் இப்பகுதியில் உயிர்வேலியை காண முடிகிறது. 

விவசாயிகளின் நலன் காக்கும் விஷயங்களில் அரசு கவனம் செலுத்துவதாக இருந்தால் மானாவாரி நிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியை தான் எடுக்க வேண்டும். மாறாக 'சிப்காட்' போன்ற தொழிற்பேட்டைகளை இதுபோன்ற இடங்களில் கொண்டு வரக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com