முத்தூரில் ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

வெள்ளகோவில்:

முத்தூர் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 44). இவர் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தங்கராஜ்க்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com