அவினாசியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சபீனா பங்கேற்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அவினாசி:

அவினாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் புகையிலை எதிர்ப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு முகாம் அவினாசியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் பிரபாவதி வரவேற்றார். முகாமில் மாவட்ட உரிமையியல் நீதிபதி வடிவேல், குற்றவியல் நீதித்துறை நடுவர் சபீனா ஆகியோர் பேசுகையில்,

புகையிலையினால் ஏற்படும் தீமைகள் அதிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துகொள்ளும் முறைகள் பற்றியும் நல்லொழுக்கங்கள் மற்றும் சட்ட உதவி மையத்தின் நோக்கம், செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் அவினாசி வக்கீல்கள் சங்க செயலாளர் சாமிநாதன், இணை செயலார் கணேஷ்குமார்,வக்கீல்கள் பிரகாஷ், சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com