அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் - 14-ந்தேதி நடக்கிறது

பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது.பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்: 

திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெறுகிறது. அதன்படி அவினாசி தாலுகாவில் சேவூர் கிராமத்திலும், தாராபுரம் தாலுகாவில் சூரியநல்லூர் கிராமத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் துங்காவி கிராமத்திலும், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமத்திலும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்திலும், உடுமலை தாலுகாவில் கணபதிபாளையம் கிராமத்திலும், ஊத்துக்குளி தாலுகாவில் விருமாண்டம் பாளையம் கிராமத்திலும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

காங்கயம் தாலுகாவில் சேனாபதி பாளையம் கிராமத்துக்கு வேலப்ப நாயக்கன் வலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் பொங்கலூர் கிராமத்துக்கு பொங்கலூர் தமிழ்நாடு வாழ்வாதார இயக்க இ-சேவை மையத்திலும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அனைத்து குடிமை பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல்,புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெறுபவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com