பஞ்சு இறக்குமதிக்கான வரி நீக்கம் - திருப்பூர் ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி

மத்திய அரசின்க்ஷ அறிவிப்பு கோவை, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளித்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பஞ்சு விலை தொடர்ந்து அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை 95 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதனால், நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஜவுளி, ஆடை உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு விதிக்கப்பட்டு வரும், வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பின்னலாடைத்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில் மத்திய அரசு (சுங்கவரித்துறை) பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு கோவை, திருப்பூர் உட்பட தமிழக ஜவுளித்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com