நூல் விலை உயர்வால் விசைத்தறிகள் இயக்கம் பாதிப்பு

உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான துணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

நூல் விலை உயர்வு காரணமாக பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள், காடா துணி உற்பத்தியை குறைத்துள்ளனர். பாவு நூல் சப்ளை கட்டுக்குள் இருப்பதால் விசைத்தறிகள் பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன.

இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்

நூல் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் தொழிலை நடத்துவதா? வேண்டாமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அகமதாபாத், குஜராத், அரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு துணிகள் அனுப்பப்படுகின்றன.

வட மாநிலங்களில் மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் பலர் துணிகளை கொள்முதல் செய்வது குறைந்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பல கோடி மதிப்பிலான துணிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

துணி உற்பத்தி குறைந்ததன் காரணமாக பெரும்பாலான விசைத்தறிகள் இயங்காமல் உள்ளன. நூல் விலை குறைந்து வடமாநிலங்களில் இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே மீண்டும் உற்பத்தி நடைபெறும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com