ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது எப்படி?- உடுமலை மாணவர் பேட்டி

தோல்வியை கண்டு பின் வாங்காமல், பெற்றோரின் ஆதரவு வார்த்தைகளுடன் மீண்டும் முயன்றார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.புரம் பகுதியை சேர்தவர் சந்தோஷ்குமார். எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் படித்து விட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் வேலைசெய்து வந்தார். இந்தநிலையில் இவரது ஆசிரியர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஸ்ரீதர், என்பவரின் அறிவுரையின் பேரில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுத தொடங்கினார்.

படிப்பதற்கு போதிய நேரமில்லா சூழலில், வருமானம் தந்து கொண்டிருந்த தனியார் நிறுவன வேலையையும் விட்டு படிக்க தொடங்கினார். முதல் முயற்சிகளில் தொடர்தோல்விகளே அவருக்கு கிடைத்தது. தற்போது ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

தோல்வியை கண்டு பின் வாங்காமல், பெற்றோரின் ஆதரவு வார்த்தைகளுடன் மீண்டும் முயன்றேன். தேர்வு குறித்து தெளிவான புரிதல், குழுவாக படித்தல், தினசரி செய்திகள் மற்றும் அதன் பல்வேறு கோணங்கள் இவற்றுடன் அரசு பயிற்சி பள்ளியில் பயிற்சி ஆகியவற்றோடு மீண்டும் களமிறங்கினேன். வெற்றி பெற்றவர்களை விட தோல்வி கண்டவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கபடவேண்டும். அவர்கள் மனம் தளராமல் வெற்றி பெறுவோம் என்ற நல்ல சிந்தனையுடன் முயலவேண்டும். தேர்வில் எந்த மாதிரியான கேள்விகளுக்கு முக்கியத்துவம் அளிக்கபடும் என சுயமாக புரிந்துவைத்துகொள்ளுதல் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். இணையம் வளர்ந்து வரும் நிலையில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகள் களையப்பட்டுள்ளது, ஆகவே இணையம் வாயிலாக கற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திட வேண்டும்.

ஐ. ஏ. எஸ், தேர்வுக்கான பாடதிட்டம் பெரியது, அதை புரிந்து படிக்கவேண்டும். பயிற்சி மையத்தில் பணியிலிருக்கும் அதிகாரிகள் ஆசிரியர்கள், ஆகியோரின் ஆலோசனைகள் பெற்றது மிகவும் உதவியாக இருந்தது. முயற்சி செய்தால் வெற்றி எல்லோர்க்கும் சாத்தியம் என்று பொத்தாம்பொதுவாக எண்ணிவிடாமல் புரிந்து படித்தல், குழுவாகப் படித்தல், தோல்விகள் குறித்து வருந்தாமல் ஏற்றுக்கொள்ளுதல், தொடர்முயற்சி, ஆகியவைகளும் அரசின் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திகொண்டதும் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது என்றார் சந்தோஷ்குமார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com