மதியத்திற்கு பிறகே வெளியே செல்ல வேண்டும் - வி.ஏ.ஓ.க்களுக்கு அதிரடி உத்தரவு

கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் கட்டாயம் இருக்க வேண்டுமென வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், வி.ஏ.ஓ.,க்கள், நில வருவாய் ஆய்வாளர்கள், மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றனர். வி.ஏ.ஓ.,க்கள் பணி நாட்களில், மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை தகவல் பலகையில் எழுதி வைத்து செல்ல வேண்டும்.கட்டாயம் தொடர்பு எண்கள் எழுதி வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com