மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்போது எடுத்தபடம்.
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்போது எடுத்தபடம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டுதல், சாலை வசதி, குடிநீர் வசதி கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 462 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டது. அதில் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் சப்- கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசு த்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com