தடுப்பணைகள் நிரம்பியதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

போதிய மழைப்பொழிவு இல்லாததால் தடுப்பணை மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே வீரசோழபுரம் பஞ்சாயத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும் 6  தடுப்பணை மற்றும் ஒரு குளம் உட்பட7 நீர் நிலைகள் நிரம்பி வருகிறது.

இதுகுறித்து வீரசோழபுரம் ஊராட்சி தலைவர் லட்சுமி கூறுகையில், வீரசோழபுரம் ஊராட்சியில் பல தடுப்பணை அமைக்கப்பட்டது. இப்பகுதியில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் தடுப்பணை மற்றும் குளங்கள் வறண்டு காணப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு வாய்க்கால் உபரிநீர் டிசம்பர் 20-ந்தேதி  முதல் 24-ந்தேதி வரை 5 நாட்கள் திறக்கப்பட்டதில் மாடன்வலசு - 2 தடுப்பணை, வீரசோழபுரம் - 4 தடுப்பணை, பொன்பரப்பி - 1 உட்பட 7 நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. இதனால்  நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com