

திருப்பூர்:
காந்தி அமைதிப்பரிசு பெற விண்ணபிப்கலாம் என்று திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமரால் 2022ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசு வழங்கப்பட உள்ளது. காந்திய வழியில் சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி, ஏழை மக்களின் துயர்களை போக்கும் தனிநபர், குழுமங்கள் இப்பரிசுக்காக விண்ணப்பிக்கலாம்.
சிக்கண்ணா கல்லூரியில் செயல்படும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், திருப்பூர் என்கிற முகவரிக்கு, இன்று மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.