பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்களால் பரபரப்பு

கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடினர்.
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
Published on

திருப்பூர்:

திருப்பூரில் இருந்து கோவைக்கு சென்று அங்குள்ள கல்லூரிகளில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவ்வாறு பயிலும் மாணவர்கள் திருப்பூரிலிருந்து அவிநாசி வழியாக கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் காலை மாலை என பயணித்து வருகின்றனர். இவர்களில் சிலர் இணைந்து அவ்வப்போது பேருந்து தினம் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாடினர். மாலை அதே பேருந்தில் திரும்பி வரும்பொழுது படிக்கட்டில் தொங்கியவாறு வந்த ஒரு மாணவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். 

இந்நிலையில் கடந்த 8-ந்தேதி அன்று திருப்பூரில் மீண்டும் பேருந்து தினம் கொண்டாடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் பேருந்து தினம் கொண்டாடுவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com