பல்லடம் அருகே இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி. 
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சியும், திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் மாணிக்காபுரம் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

பல்லடம் அரசு மருத்துவ மனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மருத்துவ முகாமில் பள்ளி கல்விக்குழுத்தலைவர் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com